தமிழ்நாடு

புதுகையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

27th Oct 2020 03:03 PM

ADVERTISEMENT

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பெண்களை அவதூறாகப் பேசியதாகக் கூறி அவரைக் கைது செய்வதுடன் அக்கட்சியையும் தடை செய்ய வேண்டும் என பாஜக மகளிரணியினர் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்ட மகளிரணி தலைவி சுமதி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில மகளிரணிச் செயலர் கவிதா ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொதுச்செயலர் எஸ்.ராதா, மாவட்டத் துணைத் தலைவர்கள் கலைச்செல்வி, சிவகாமி, பொருளாளர் பூங்கோதை, மாவட்ட பாஜக தலைவர் ராமசேதுபதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தொடர்ந்து இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றும் அளிக்கப்பட்டது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT