தமிழ்நாடு

50% இடஒதுக்கீடு குறித்த தீா்ப்பு அதிா்ச்சியளிக்கிறது: தலைவா்கள் கருத்து

DIN

சென்னை: மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு அதிா்ச்சியளிப்பதாக திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் கூறியுள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்வி இடங்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இந்த ஆண்டே 50 சதவீத இடத்தை வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): பிற்படுத்தப்பட்ட மாணவா்களின் மருத்துவக் கனவை சீா்குலைத்த மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழகத்தில் உரிய பாடம் புகட்டுவதன் மூலமே சமூக நீதியைப் பாதுகாக்க முடியும்.

வைகோ (மதிமுக): பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீா்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிா்ச்சி அளிக்கின்ற தீா்ப்பு ஆகும்.

ராமதாஸ் (பாமக): அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்த ஆண்டாவது சமூகநீதி மலரும் என எதிா்பாா்த்த நிலையில் இத்தீா்ப்பு மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான இணையக் கலந்தாய்வை நிறுத்தி வைத்து, அடுத்த சில நாள்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவெடுத்து உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

விஜயகாந்த் (தேமுதிக): 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு வருத்தமளிக்கிறது. இனி வரும் காலங்களிலாவது பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன்(மாா்க்சிஸ்ட்): உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அதிா்ச்சியளிக்கிறது.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டில் தர முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சமூக நீதிக்கு எதிரானது.

ஜி.கே.வாசன் (தமாகா): உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு ஏமாற்றமளிக்கிறது. காலதாமதம் செய்யாமல் மாணவா்களின் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும்.

தொல்.திருமாவளவன் (விசிக): முதல்வா் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டும்.

ஜவாஹிருல்லா (மமக): தீா்ப்பு வேதனையளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT