தமிழ்நாடு

சேலம் அருகே தொழிலாளி கிணற்றில் தள்ளிக் கொலை: மனைவி கைது

26th Oct 2020 05:52 PM

ADVERTISEMENT

 

சேலம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே கூலித்தொழிலாளி கிணற்றில் தள்ளிக் கொலை செய்த சம்பவத்தில் மனைவி மற்றும் அவரது காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் சம்பாநகர் பகுதியைச்சேர்ந்த ரவி(32) கூலித்தொழிலாளி. இவருக்கு உதயா என்ற மனைவியும் ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சதீஸ்குமாரிடம் வரவு செலவு கணக்கில் ரவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதில் உதயா சதீஸ்குமார் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியுள்ளது. இதனை ரவி கண்டித்துள்ளார். 

இதனையடுத்து கடந்த 6ம்தேதி வெளியில் சென்ற ரவி காணவில்லை என ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தேடி வந்தனர். கடந்த 8ம் தேதி அதே பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் சடலமாக ரவி மீட்கப்பட்டார். ரவியின் சாவில் மர்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.தீபாகாணிக்கருக்கு தகவல் கிடைத்தது. 

ADVERTISEMENT

அவருடைய உத்தரவின் பேரில் வாழபாபாடி காவல்துணைக்கண்காணிப்பாளர் வேலுமணி ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் தனிப்படை அமைத்து ரவியின் செல்போன் மூலம் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் சத்தீஸ்குமார் 6ம்தேதி வரவு செலவு குறித்துப் பேசவேண்டும் என அழைத்து ஒதுக்குப்புறமாக மது அருந்தியுள்ளனர். அப்போது போதையிலிருந்த ரவியை ஏரி அருகே உள்ள விவசாயக் கிணற்றில் தள்ளிவிட்டது தெரியவந்தது.

மேலும் இதற்கு உதயா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து உதயா சத்தீஸ்குமார் ஆகியோரை ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT