தமிழ்நாடு

பாஜகவில் இணைந்தார் மோகன் வைத்யா

26th Oct 2020 12:07 PM

ADVERTISEMENT

கர்நாடக இசைக் கலைஞரும், பிக்பாஸ் பிரபலமுமான மோகன் வைத்யா பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் பணிகள் மும்முரமாகத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இந்த தேர்தலில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது. 

இதன் ஒருபகுதியாக பிரபலங்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்த நிலையில், இன்று பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மோகன் வைத்யா பாஜகவில் இணைந்துள்ளார். 

கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவர், 'பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும்; தாமரை மலர்ந்தே தீரும்' என்று கூறினார். 

ADVERTISEMENT

Tags : பாஜக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT