தமிழ்நாடு

'அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும்'

26th Oct 2020 11:36 AM

ADVERTISEMENT

அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு (72) கடந்த 13-ம் தேதி கடுமையான மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு இணை நோய்கள் உள்ளன. 90 சதவிகித நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. 
அவர் தற்போது எக்மோ கருவி மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளார். 
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரையில், கொவைட்-19-ஆல் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன்.
அமைச்சர் முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT