தமிழ்நாடு

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

26th Oct 2020 06:51 PM

ADVERTISEMENT


வேளாண் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

துரைக்கண்ணு உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"கரோனா தொற்று நிமோனியா மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

அவரது இணை நோய்களைக் கருத்தில் கொண்டு, அவரது உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. அவர் அதிகபட்ச உயிர் காக்கும் உதவிகளுடன் இருக்கிறார். அடுத்த 24 மணி நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பதைப் பொறுத்தே முன்னேற்றம் குறித்து தெரியவரும்."

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT