தமிழ்நாடு

துரைக்கண்ணுவுக்கு உடல்நலக்குறைவு: அமைச்சர்கள் நேரில் சென்று நலம் விசாரிப்பு

26th Oct 2020 02:29 PM

ADVERTISEMENT

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவை அதிமுக அமைச்சர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு(72) கடந்த 13-ம் தேதி கடுமையான மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு கரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 90 சதவிகிதம் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது எக்மோ கருவி மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

முன்னதாக, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மருத்துவமனைக்குச் சென்று துரைக்கண்ணுவை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று அவரது உடலில் சற்று பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, இன்று அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். 

ADVERTISEMENT

Tags : துரைக்கண்ணு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT