தமிழ்நாடு

சென்னையில் கரோனா பாதிப்பு: மண்டலவாரியாக விவரம்

26th Oct 2020 01:52 PM

ADVERTISEMENT


சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி அனைத்து மண்டலங்களிலும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை  1000-க்கும் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,95,672 ஆக உள்ளது. இவர்களில் 1,82,441 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சென்னையில் ஒட்டுமொத்தமாக 9,639 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கரோனா பாதித்தவர்களில் இதுவரை 3,592 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் பாதித்த நோயாளிகளில் 62.06 சதவீதம் பேர் ஆண்கள், சுமார் 37.94 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

ADVERTISEMENT

கரோனா பாதித்த நோயாளிகளில் 50 - 59 வயதுக்குட்பட்டவர்கள் 18.37 சதவீதம் பாதித்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் 40 - 49 வயதுடையவர்கள் 18.27 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் அதிகபட்சமாக அண்ணாநகர் 850 மற்றும் கோடம்பாக்கத்தில் மட்டும் 746 பேரும் சிகிச்சை பெற்று வருகிறனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : coronavirus chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT