தமிழ்நாடு

கன்னியாகுமரியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும்: கே.எஸ்.அழகிரி

26th Oct 2020 01:52 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும் என  தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில், கடுமையான பாதிப்பை இந்தியா சந்தித்து வருகிறது. இதையெல்லாம் மூடி மறைக்கின்ற வகையில், கரோனா உயிரிழப்புகளை குறைத்ததன் மூலம், இந்தியா சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப் போகிறார்கள். அதேபோல, 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பாஜக ஆட்சி அகற்றப்படுவதற்கு முன்னோட்டமாக பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது.

நரேந்திரமோடிக்கு எதிராக அரசியல் காற்று வீச ஆரம்பித்துவிட்டது. மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையில் ஈடுபட்டுள்ள கட்சிகளுக்கு நம்பிக்கையூட்டுகின்ற வகையில் பிகார் தேர்தல் முடிவுகள் வெளிவரப் போகின்றன. மேலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எங்கள் தொகுதி; இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும். 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT