தமிழ்நாடு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

26th Oct 2020 12:52 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் நான்களு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

ADVERTISEMENT

நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டதுடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்

பட்டுக்கோட்டை, திருமயம் தலா 5 செ.மீ மழையும், உசிலம்பட்டி, ஒரத்தநாடு தலா 4 செ.மீ மழையும், ஆலங்குடி 3 செ.மீ மழையும், மதுரை விமான நிலையம், முத்துப்பேட்டை, சிவகிரி, தளி, ஜெயன்கொண்டம் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

Tags : rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT