தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயிலில் விஜய தசமியை முன்னிட்டு அம்பெய்தும் வேட்டை நிகழ்ச்சி

26th Oct 2020 05:18 PM

ADVERTISEMENT

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விஜய தசமியை முன்னிட்டு சுவாமி அலைவாயுகந்தப் பெருமான் வசந்தமண்டபத்தில் கேடய சப்பரத்தில் எழுந்தருளி அம்பெய்தும் வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் வேட்டைக்குச்சென்று விட்டு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாகும். 

நிகழாண்டில், கரோனா பொது முடக்கத்தால் இந்நிகழ்ச்சியானது திருக்கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் வைத்து திங்கள்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோயிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் சிறிய கேடய சப்பரத்தில் எழுந்தருளி வசந்தமண்டபத்திற்கு வந்தார். 

ADVERTISEMENT

அங்கு வைத்து சுவாமி அலைவாயுகந்தப் பெருமான் அம்பெய்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கிரிவீதி வழியாக சுவாமி திருக்கோயில் சேர்ந்தார். கரோனா தடுப்பு நடவடிக்கையாக நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT