தமிழ்நாடு

'தமிழ்வழி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீடு வேண்டும்'

26th Oct 2020 04:06 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் எஸ்.டி.பி.அய்.கட்சி சார்பில், மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஏ.தப்ரே ஆலம் பாதுஷா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் முன்னிலை வகித்தார்.மாவட்ட பொதுச் செயலாளர் எம்.விலாயத் உசேன் வரவேற்றார். 

தொடர்ந்து கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு...

ADVERTISEMENT

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டபடி, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் எஸ்.டி.பி.அய். கட்சியின் சார்பில் போட்டியிட மாநில நிர்வாகத்திற்கு, மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்து மாவட்டத்தின் அனைத்து வார்டுகளிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

கட்சியின் கிளை நிர்வாகிகளிடம் கட்சியின் வளர்ச்சி மற்றும் நிதி தொடர்பாக விவாதிக்கப்பட்டு, கிளைகளில் உறுப்பினர்களை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த தீர்மானத்தின் மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்த தமிழக ஆளுநரை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. வரும் அக்டோபர் 30 ஆம் தேதி பூதமங்கலத்தில் கிளை அலுவலகம் திறப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர்கள் பி.என்.அஹமது மைதீன், அப்துல் அஜீஸ், மாவட்டச் செயலாளர் டி.எம்.ஹெச்.அப்துல் ராஜிக், மாவட்டப் பொருளாளர் ஆரிஃபீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கம்பூர் நவாஸ், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.ஏ.நஸிமா பானு, மாவட்டத் தலைவர் பாயிஜா சஃபீக்கா, மாவட்ட பொதுச் செயலாளர் கதிஜா முபாரக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, மாவட்டச் செயலாளர் எம்.ஏ.லத்தீஃப் நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT