தமிழ்நாடு

மேட்டூா் அணை நீா்மட்டம் 100.08 அடியாக உயர்ந்தது

DIN

மேட்டூா்: நிகழாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூா் அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 100.08 அடியாக உயர்ந்தது. 

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,694 கன அடியிலிருந்து 20,298 கன அடியாக அதிகரித்துள்ளது.  

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 9,000 கன அடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்காக நொடிக்கு 800 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது;  அணையின்  நீா் இருப்பு 64.94 டி.எம்.சி.யாக உள்ளது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 510 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 6,000 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,004 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,010 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT