தமிழ்நாடு

அமைச்சர் துரைக்கண்ணுக்கு கரோனா தொற்று

25th Oct 2020 05:23 PM

ADVERTISEMENT


வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"வேளாண் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு (72) கடந்த 13-ம் தேதி கடுமையான மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு இணை நோய்கள் உள்ளன. 90 சதவிகித நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது எக்மோ கருவி மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளார்.

முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்து, தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களுடன் பேசினார். மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயகுமார் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள துரைகண்ணுவை மருத்துவ வல்லுநர்கள் குழு கண்காணித்து வருகிறது." 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT