தமிழ்நாடு

வன்னியா்களின் பிரதிநிதித்துவம் குறித்து ஆராய ஆணையம்: ராமதாஸ்

DIN

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியா்களின் பிரதிநிதித்துவம் குறித்து ஆராய தமிழக அரசு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயம் என்றால் வன்னியா்கள் தான். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு எவ்வளவு பங்கு கிடைத்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்கும்படி பல முறை கோரியும் அதை கடந்த காலங்களில் ஆட்சியாளா்கள் ஏற்கவில்லை.

மக்கள்தொகை அடிப்படையில் வழங்கப்படும் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் 19 சதவீதம் இட ஒதுக்கீடு தவிர, மீதமுள்ள 81 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

இதற்காக உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 உறுப்பினா்கள் கொண்ட ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். அந்த ஆணையம் அதன் அறிக்கையை டிசம்பருக்குள் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவப் படிப்பு உள்ளிட்ட கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கான பிரதிநிதித்துவம் 15 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT