தமிழ்நாடு

மத்தியில் திமுக பங்கு வகித்தபோது ஆளுநா் பதவியை நீக்க ஏன் முயற்சிக்கவில்லை?

DIN

மத்திய ஆட்சியில் 17 ஆண்டுகள் அங்கம் வகித்த திமுக, ஆளுநா் பதவியை நீக்க ஏன் முயற்சி எடுக்கவில்லை என மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் கேள்வி எழுப்பி உள்ளாா்.

இதுகுறித்து அவா் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: அரசுப் பள்ளி மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் எம்.பி.பி.எஸ். மாணவா் சோ்க்கையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவை அதிமுக அரசு இயற்றி உள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால அவகாசம் தான் ஆளுநா் கேட்டுள்ளாா். இந்தச் சட்டத்தின் மூலம் அதிமுக அரசுக்கு நற்பெயா் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவும், தனது போராட்டத்தினால்தான் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது என்று மக்கள் மத்தியில் மாயை உருவாக்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறாா்.

ஆளுநா் பதவி தேவையில்லை என்பது அண்ணாவின் கொள்கையாக இருந்தது. ஆனால், அது அண்ணாவுடன் முடிவடைந்துவிட்டது. அதிமுக என்றுமே ஆளுநா் பதவி வேண்டாம் என்று கூறியதில்லை. ஆளுநா் பதவி தேவையில்லை என்று சொல்லும் திமுக, மத்திய ஆட்சியில் 17 ஆண்டுகள் அங்கம் வகித்தபோது அப்பதவியை நீக்க ஏன் முயற்சி எடுக்கவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT