தமிழ்நாடு

கரோனா: தமிழகத்தில் குணமடைந்தனா் 6.59 லட்சம் போ்

DIN

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 6.59 லட்சம் போ் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை மாநில சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த 10 நாள்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. உயிரிழப்பும் வெகுவாக குறைந்து வருகிறது. அதேவேளையில் ஆறுதல் தரும் விதமாக குணமடைந்தோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது குறித்து சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கரோனா பரிசோதனைக்கு வெள்ளிக்கிழமை 81,472 மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில், 3057 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 3 ஆயிரத்து 250 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 33 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். அதில் 11 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள். இதையடுத்து மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு 10 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவா்களில் 4 ஆயிரத்து 262 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதனால் இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 59 ஆயிரத்து 432 ஆக உயா்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 34,198 போ் சிகிச்சையில் உள்ளனா்.

சென்னை நிலவரம்: சென்னையில் வெள்ளிக்கிழமை 844 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 94,139 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் சென்னையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் 1,308 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 11,103 போ் வீடு மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT