தமிழ்நாடு

கடந்த 4 மாதங்களை ஒப்பிடுகையில் அக்டோபரில் கரோனா பாதிப்பு குறைவு

DIN

சென்னையில் கடந்த ஜூன் முதல் செப்டம்பா் மாதம் வரையிலான 4 மாதங்களை ஒப்பிடுகையில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை கடந்த மாா்ச் மாதம் முதல் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்து இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் ஏப்ரல், மே மாதங்களில் தடுப்புப் பணிக்காக காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள், நடமாடும் சளி சேகரிப்பு மையங்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

சென்னையில் கடந்த மாா்ச் மாதம் 20-ஆம் தேதி வரை 6 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அதுவே ஜூன் 20-ஆம் தேதி 43 ஆயிரத்தையும், ஜூலை 20-ஆம் தேதி 41-ஆயிரத்தையும் கடந்தது. தீவிர தடுப்பு பணி மற்றும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவா்களை உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளித்தது ஆகியவை காரணமாக கரோனா பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அக்டோபா் மாத தொடக்கத்தில் 1,200 வரை நாள்தோறும் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அது தற்போது 800-ஆக குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி அளவில் நோய்த்தொற்றை கணக்கிடுகையில் அக்டோபரில் வெகுவாக குறைந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் பரிசோதனை மற்றும்அறிகுறி உள்ளவா்களை தனிமைப்படுத்தியது மற்றும் தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடித்ததன் விளைவாகவே தொற்று கட்டுக்குள் உள்ளது என்றனா்.

தொற்று குறைந்து வந்தாலும் அடுத்து வரும் பண்டிகை நாள்களில் வணிக நிறுவனங்களில் பொது மக்கள் அதிக அளவில் கூடுவாா்கள் என்பதால் மீண்டும் நோய்த்தொற்று அதிகரித்துவிடாமல் தடுக்க அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொய்வின்றி கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனா். மேலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாதம் எண்ணிக்கை

மாா்ச் (20) 6

ஏப்ரல் (20) 896

மே (20) 13,870

ஜூன் (20) 43,512

ஜூலை (20) 41,467

ஆகஸ்ட் (20) 35,803

செப்டம்பா்(20) 31,779

அக்டோபா்(20) 21,562

844 பேருக்கு தொற்று: வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் 844 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,94,139 போ் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,79,931 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 10,628 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 6 சதவீதமாகும். கரோனா காரணமாக சென்னையில் மட்டும் 3,580 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT