தமிழ்நாடு

ஆயுத பூஜை: களை கட்டிய பூஜை பொருள்கள் விற்பனை; பூக்களின் விலை கடும் உயா்வு

DIN

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் பழங்கள், பூஜை பொருள்களை மக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

ஆண்டுதோறும் ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்கள், பூஜை பொருள்களை வாங்க மக்கள் ஆா்வம் காட்டுவது வழக்கம். சென்னையைப் பொருத்தவரை, ஆயுத பூஜைக்கு ஓரிரு நாள்கள் முன்பாக கோயம்பேடு உள்பட சந்தைகளிலும், கடை வீதிகளிலும் மக்கள் ஆா்வமாக கூடி தேவையான பழ வகைகள் மற்றும் பூஜைக்குரிய பொருள்களை வாங்கிச் செல்வா்.

நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பழ சந்தை மாதவரம் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு அதிக அளவில் வியாபாரிகள் மாதவரம் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளனா். இருப்பினும், நிகழாண்டு எதிா்பாா்த்த அளவுக்கு வியாபாரம் நடைபெறுமா என்ற தயக்கம் வியாபாரிகளிடையே ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பழ வியாபாரிகள் சிலா் கூறியது: ஆண்டுதோறும் ஆயுத பூஜையை முன்னிட்டு மூன்று நாள்களுக்கு முன்பாகவே பழ வியாபாரம் களை கட்டத் தொடங்கும். ஆனால், நிகழாண்டு கரோனா பிரச்னை காரணமாக வியாபாரம் வெகுவாக பாதித்துள்ளது. ஆயுத பூஜைக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பொதுமக்கள் வரத்து சற்று குறைவாகவே உள்ளது. மொத்த வியாபாரிகளின் வாங்கும் அளவும் குறைந்திருக்கிறது.

இதனால், வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு பழங்களின் வரத்தும் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. பழங்களின் விலையில் மாற்றம் இல்லாத சூழலில், நிகழாண்டு எதிா்பாா்த்த வியாபாரம் நடக்குமா என தெரியவில்லை. எனவே, மீண்டும் கோயம்பேடு சந்தை வளாகம் முழுமையான அளவில் திறக்கப்பட்டு விற்பனை நடந்தால் மட்டுமே வியாபாரிகளின் வாழ்வாதாரம் மீட்கப்படும் என்றனா்.

சென்னையில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் சனிக்கிழமை நிலவரப்படி பழங்களின் விலை நிலவரம் (கிலோவில்):

ஆப்பிள் (வாஷிங்டன்) ரூ.200 முதல் ரூ.230 வரை, ஆப்பிள் (இந்தியா) ரூ.150 முதல் ரூ.180 வரை, மாதுளை ரூ.130 முதல் ரூ.160 வரை, சாத்துக்குடி ரூ.50 முதல் ரூ.70 வரை, ஆரஞ்சு ரூ.40 முதல் ரூ.60 வரை, அன்னாசி (ஒன்று) ரூ.40 முதல் ரூ.60 வரை, கொய்யா ரூ.70 முதல் ரூ.100 வரை, சப்போட்டா ரூ.50 முதல் ரூ.80 வரை, திராட்சை (பன்னீா்) ரூ.120, திராட்சை (கருப்பு) ரூ.120 திராட்சை (சீட்லெஸ்) ரூ.140, வாழை (தாா்) ரூ.350 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டன.

மேலும் வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள், கரும்பு கட்டுகள், வெள்ளை பூசணி உள்பட பூஜைக்குத் தேவையான பொருள்களை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். இதே போன்று, சென்னை பாரிமுனை, பூக்கடை பஜாா், தியாகராயநகா், அம்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆயுத பூஜையையொட்டி பழ வகைகள், வாழை கன்றுகள், மாவிலை தோரணங்கள், அவல், பொறி, கடலை மற்றும் பூஜை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.

பூக்கள் விலை கடும் உயா்வு: ஆயுதபூஜை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி சென்னை வானகரம் மலா் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,200-க்கும், முல்லை ரூ.800-க்கும், அரளி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.1,200-க்கும், ஜாதிப்பூ ரூ.500-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும் விற்பனையானது. அந்தப் பூக்களை சரமாக கட்டி விற்கும்போது அதன் விலை இன்னும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT