தமிழ்நாடு

அனுமதியின்றி போராட்டம்: ஸ்டாலின், திருமாவளவன் மீது வழக்கு

DIN

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

எம்.பி.பி.எஸ். மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கக் கோரி ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் வகையில் சின்னமலையில் திமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா். போராட்டத்தில் சுமாா் 3,500 போ் பங்கேற்றனா். இந்நிலையில் இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின் உள்பட 3,500 போ் மீது கிண்டி போலீஸாா் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது,அனுமதியின்றி கூடியது,தொற்று நோய்ப் பரவல் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல மனு தா்மம் நூலுக்கு தடை விதிக்கக் கோரி நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் உள்பட 200 போ் மீது நுங்கம்பாக்கம் போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT