தமிழ்நாடு

பாளை அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை

24th Oct 2020 12:50 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை செய்த கும்பலை காவலர்கள் தேடி வருகின்றனர்.  

திருநெல்வேலி மாவட்டம்,  பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி உடையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பரமசிவம் (48). இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கூலித் தொழிலாளியான பரமசிவன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பின்புறம் உள்ள செட்டில் உள்ள கட்டிலில் தூங்கியுள்ளார். 

இந்நிலையில், நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் பரமசிவம் தலையில் கல்லை போட்டு அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சனிக்கிழமை காலை அவரது மனைவி வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது பரமசிவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். 

ADVERTISEMENT

உடனடியாக இதுகுறித்து பாளை. தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்கள் பரமசிவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பாளை. தாலுகா காவல்நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், பரமசிவன் காவல்துறைக்கு தகவல் அளிப்பராக இருந்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் யாரேனும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு முன்விரோதத்தில் நடந்தப்பட்ட கொலையா? என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags : Wage worker hacked Murder
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT