தமிழ்நாடு

ஆயுதபூஜை - விஜயதசமி: ஆளுநர் வாழ்த்து

24th Oct 2020 04:01 PM

ADVERTISEMENT

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், ஆயுதபூஜை பண்டிகை தீய சக்திகளின் மீது நல்ல சக்திகளின் வெற்றியைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 
நவராத்திரி கொண்டாட்டங்களில் மனித இனத்தைப் பேணிப் பாதுகாக்கும் துர்கை அன்னையைப் போற்றிப் பாடுகின்றோம். பத்தாம் நாளில் பகவான் ஸ்ரீராமர் மற்றும் துர்கை அன்னையின் வெற்றியை விஜயதசமியாக நாடு முழுவதும் பல்வேறு முறைகளில் கொண்டாடுகின்றோம்.
இந்த விஜயதசமி நன்னாள், நம் வாழ்வில், உண்மையாயிருத்தல், நன்மை செய்தல், மற்றும் நேர்மையை வெளிப்படுத்துதல் ஆகிய நற்பண்புகளை நிலைநிறுத்தி, நம் குடும்பங்களில் என்றும் கண்டிராத வளத்தையும், வளர்ச்சியையும் அளிக்கும் புதிய ஆற்றலைப் பறைசாற்றுவதாய் அமையட்டும். இத்திருவிழா நம் மாநிலத்திலும் நாட்டிலும் அமைதி, நல்லிணக்கம், வளம் மற்றும் நல்ல உடல் நலத்தை நல்கிட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags : governor
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT