தமிழ்நாடு

ஈரோட்டில் ஆயுத பூஜை விற்பனை: கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

DIN

ஈரோடு ஆயுத பூஜையையொட்டி இன்று கடைவீதிகளில் பூஜை பொருள்கள், பொரி, பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாடு முழுவதும் ஆயுத பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அனைத்து விதமான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்து, பூஜை செய்து வழிபாடு நடத்தப்படும். 

ஆயுத பூஜையையொட்டி ஈரோட்டில் பூஜை பொருள்களை விற்பனை செய்வதற்காக ஆர்கேவி ரோடு, நேதாஜி தினசரி மார்க்கெட், சின்ன மார்க்கெட், கொங்காலம்மன் கோவில் வீதி, சத்தி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பெரிய மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் போன்ற பகுதிகளில் வியாபாரிகள் ரோட்டோரங்களில் தற்காலிக கடைகள் அமைத்து, தேங்காய், வாழைப்பழம், பழங்கள், பூ மாலை, வாழைக்கன்று, திருஷ்டி பூசனிக்காய்(வெள்ளை பூசனி), பொரி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்தனர். 

இந்த பூஜை பொருள்களை வாங்க ஈரோடு கடை வீதிகளில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. பொருள்களை வாங்கும் பொதுமக்கள் வாகனங்கள் ஆங்காங்கே ரோட்டோரம் நிறுத்தியிருந்ததால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஆயுதபூஜையையொட்டி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் நாளை விடுமுறை என்பதால், இன்றே சுத்தம் செய்து பூஜைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT