தமிழ்நாடு

காடையாம்பட்டியில் 5க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் தொடக்கம்

24th Oct 2020 04:17 PM

ADVERTISEMENT

 

காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 5க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தண்ணீர் குழாயைத் திறந்து வைத்து குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 5க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் தொடங்கப்பட்டது. இதில் காருவள்ளி, கொங்குபட்டி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதியதாக குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்வதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி பணிகள் முடிக்கப்பட்டது. 

தொடர்ந்து நடந்து முடிந்த பணிகளை ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தண்ணீர் குழாயை திறந்து வைத்து குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து குடிநீர் வினியோக தொடக்க விழாவிற்கு கலந்துகொள்ள வந்த சட்டமன்ற உறுப்பினருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்துச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

ADVERTISEMENT

நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், சேரன்செங்குட்டுவன், கோவிந்தராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைக்க வந்த ஓமலூர் சட்டமன்ற உறுப்பினருக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT