தமிழ்நாடு

அக். 27-ல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

24th Oct 2020 11:47 AM

ADVERTISEMENT


சென்னை: பொதுமக்களின் வசதிக்காக அக்டோபர் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மட்டும் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்ப வரும் பயணிகள் வசதிக்காக வருகிறது 27-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மட்டும் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 7 மணிக்குப் பதிலாக காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே..  இறந்த கரோனா நோயாளிக்கு முதல் முறையாக உடற்கூராய்வு; காத்திருந்த அதிர்ச்சி

ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு விடுமுறையில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள், செவ்வாயன்று பணிக்குத் திரும்ப வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : Chennai Metro Rail
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT