தமிழ்நாடு

செங்கல்பட்டில் ஆயுத பூஜை விற்பனை மந்தம்: வியாபாரிகள் வேதனை

DIN

ஆயுத பூஜை விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்ட பூசணிக்காய் உள்ளிட்ட பூஜைக்குரிய விற்பனை பொருள்கள் மந்த நிலையில் விற்பனை ஆவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இந்துக்களின் திருவிழாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா முக்கிய திருவிழாவாக ஒன்பது நாள்களும் அனைத்து  கோயில்கள் விழா மற்றும் பல்வேறு விழாக் குழுவினரால் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். 

இந்த நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையில் வீடுகளில் படிக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் சான்றிதழ்கள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களை வைத்து பொரி அவல் கடலை என பூஜை பொருள்கள் வைத்து பூஜை செய்வார்கள். மேலும் அனைத்து வாகனங்களையும் கழுவி சுத்தம் செய்து பூஜை போடுவார்கள் இதேபோல் கடைகள் தாபனங்கள் கம்பெனிகள் பெரிய பெரிய நிறுவனங்கள் என பெரிய அளவில் ஆயுத பூஜை விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி பூஜை செய்வது வழக்கம் எப்படிக் கொண்டாடப்படும். 

ஆயுத பூஜையை ஒட்டி கடைவீதிகளில் பூசணிக்காய் பழங்கள் வாழைக்கன்றுகள் பொரிகடலை பூக்கள் என ஏராளமானோர் பல்வேறு ஊர்களிலிருந்து வாகனங்களில் கொண்டு வந்து இறக்கி வியாபாரம் செய்வது வழக்கம். இந்த ஆண்டும் ஆயுத பூஜையை ஒட்டி ஏராளமான வியாபாரிகள் செங்கல்பட்டு பல்வேறு பகுதிகளில் வாழைக்கன்றுகள் பூசணிக்காய்கள் திருஷ்டி கயிறு திருஷ்டி பொம்மைகள் உள்ளிட்ட பொருள்களை கொண்டு வந்து வைத்து சீசன்  வியாபாரம் செய்கின்றனர்.

ஆனால் இந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தால் பல்வேறு பெரிய பெரியகம்பெனி. ஸ்தானங்கள் நிறுவனங்களில் ஆயுத பூஜை கள் எளிய முறையில் கொண்டாடுவதால் வியாபாரம் ஒன்றும் இன்றி கொண்டு வந்த பொருள்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த டேனியல் என்பவர் கூறுகையில்..

ஒரு டன் வாழைமரம் பூசணிக்காய் என வாங்கி வந்து கடை விரித்தோம். ஆனால் வியாபாரம் என்பது இல்லாமல் போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்ற கேள்வி குறியில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. வாழைமரகன்று ஜோடி  ரூ.20ல் இருந்து ரூபாய் 80 வரையும் .அளவிற்கேற்ப பூசணிக்காய்  விலை ரூபாய். 30இல் இருந்து 100 ரூபாய் வரை நிற்கின்றோம் .ஆனால் ஆண்டுதோறும் இருக்கும் கூட்டமும் வியாபாரமும் இல்லாமல் சோர்ந்து உள்ளோம் என தெரிவித்தார். 

இதேபோன்று செங்கல்பட்டு ராஜாஜி தெருவில் பூ வியாபாரம் செய்யும் பூக்கடை ஞானம் என்பவர் கூறுகையில், 

விற்பனையில் எல்லா வியாபாரமும் மந்தமாகத்தான் உள்ளது. இதில் பூ வியாபாரமும் மிகவும் மந்தமாகவே உள்ளது. சாமந்திப்பூ கிலோ 80 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விடுகின்றோம். பூவின் தரத்திற்கு ஏற்ற விற்பனை இருந்தாலும் வாடிக்கையாளர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளதால் பூக்கள் விற்காமல் அப்படியே உள்ளது. கடந்த ஆண்டு பூக்கள் கிடைக்காமல் மக்கள் அலைந்து திரிந்தனர். 

ஆனால் இந்த ஆண்டு எங்கு பார்த்தாலும் வியாபாரிகள் பூக்களை வியாபாரத்திற்காக குவித்து வைத்தனர். ஆனால் பூக்கள் இருந்தும் வியாபாரம் இல்லாமல் இருக்கின்றோம். இந்த பூக்கள் விற்றால்தான் கிராமங்களிலிருந்து கொண்டு வந்து பூக்களைக் கொடுக்கும் வியாபாரிகளுக்கு பணம் தர முடியும் இப்படி வியாபாரம் இருந்ததால் இந்த ஆண்டு ஆயுத பூஜை மாதிரியே தெரியவில்லை என வேதனை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT