தமிழ்நாடு

திருமாவளவன் மீது  காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார்

24th Oct 2020 03:25 PM

ADVERTISEMENT

 

இந்து பெண்கள் குறித்து இழிவாக பேசி வரும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீது ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் பாஜகவினர் சனிக்கிழமை புகார் அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில், பெண்களை இழிவாக பேசி வரும் விசிக தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி ஆம்பூர் நகர பாரதிய ஜனதா கட்சியினர் நகர தலைவர் பிரேம்குமார் தலைமையில் புகார் மனு அளித்தனர்.

பாஜக திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சி. வாசுதேவன், முன்னாள் மாவட்ட தலைவர் கொ.  வெங்கடேசன், நிர்வாகிகள் தண்டாயுதபாணி, ஆனந்தன், ரமேஷ் கண்ணா, சீனிவாசன், சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT