தமிழ்நாடு

தமிழகத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்

24th Oct 2020 09:50 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இதன்படி காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம், திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் தருமபுரி ஆட்சியராக இருந்த மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராகவும், கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அன்பழகன், மதுரை மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

அதேசமயம், தருமபுரி ஆட்சியராக கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அரவிந்தனும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக வெங்கட பிரியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மதுரை ஆட்சியராக இருந்த வினய், சேலம் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் ஆட்சியர் தேர்வு வாரிய தலைவராக நிர்மல் குமாரும், சுகாதாரத்துறை இணை செயலாளராக அஜய் யாதவும்,  கூடுதல் தலைமைச் செயலர் அபூர்வ வர்மா விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுகாதாரத்துறை திட்ட இணை செயலாளராக இருந்த சிவஞானம் சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

ADVERTISEMENT

Tags : tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT