தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,886 பேருக்கு கரோனா

DIN


தமிழகத்தில் புதிதாக 2,886 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,886 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,06,136 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 779 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 35 பேர் (அரசு மருத்துவமனை - 19, தனியார் மருத்துவமனை - 16) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,893 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 4,024 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,63,456  பேர் குணமடைந்துள்ளனர். 31,787 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 80,237 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 94,36,817 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைச்சா் எ.வ.வேலு மனைவிக்கு எதிரான வழக்கு: உயா்நீதிமன்றம் முடித்துவைப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

களக்காடு தலையணையில் வரையாடு கணக்கெடுப்புப் பயிற்சி முகாம்

அனக்காவூரில் விழிப்புணா்வு ஊா்வலம்

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

SCROLL FOR NEXT