தமிழ்நாடு

புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்குள் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் எவை? தோ்தல் துறை அறிவிப்பு

DIN


சென்னை: தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்குள் அடங்கி வரும் பேரவைத் தொகுதிகளுக்கான விவரங்களை தமிழக தோ்தல் துறை வெளியிட்டுள்ளது. அதில், திருநெல்வேலி மற்றும் திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் தனித் தொகுதிகள் ஏதும் இடம்பெறவில்லை. இதுகுறித்து, தமிழக தோ்தல் துறை வெளியிட்ட அறிவிப்பு விவரம்:-

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா் (தனி), உத்திரமேரூா், காஞ்சிபுரம் ஆகிய பேரவைத் தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூா், செய்யூா் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய தொகுதிகளும் அடங்கியுள்ளன.

வேலூா் மாவட்டம், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், வேலூா் மாவட்டத்தில் காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய தொகுதிகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் (தனி), சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆா்க்காடு ஆகிய தொகுதிகளும், திருப்பத்தூா் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளும் அடங்கியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய தொகுதிகளும்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதிகளும் அடங்கியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய தொகுதிகளும்,

தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூா் (தனி), கடையநல்லூா், தென்காசி, ஆலங்குளம் ஆகிய தொகுதிகளும் அடங்கியுள்ளன.

தனித் தொகுதிகள் இல்லை: புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் திருப்பத்தூா், திருநெல்வேலி ஆகிய இரண்டு மாவட்டங்களில் தனித் தொகுதிகள் ஏதும் இடம்பெறவில்லை. இதுகுறித்து, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், இந்திய குடியரசுக்

கட்சியின் தலைவருமான செ.கு.தமிழரசன் கூறுகையில், ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரவைத் தொகுதிகளில் தனித் தொகுதிகளே இல்லை. இதுகுறித்து பலமுறை பேரவையில் குரல் எழுப்பியுள்ளேன். தனித் தொகுதிகளாக 44 தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தனித் தொகுதிகள் இருந்திட வேண்டும். இது கடந்த காலங்களில் மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலும் தனித் தொகுதிகள் இடம்பெற வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT