தமிழ்நாடு

மேட்டூர் மாரியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு: அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருட்டு 

DIN


மேட்டூர் மாரியம்மன் கோவிலில் இருந்த 2 உண்டியல்கள் உடைத்து பணமும், அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம், மேட்டூர் மேற்கு நெடுஞ்சாலையில் இந்திரா நகரில்  உள்ளது பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பூஜை செய்வதற்காக பூசாரி கமலக்கண்ணன் சென்றுள்ளார். அப்போது கிரில் கேட் உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆலயத்தின் உள்ளே சென்று கருவறையில் பார்த்தபொழுது அம்மன் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க தாலி திருடப்பட்டிருந்தது. 

மேட்டூர் மாரியம்மன் கோவிலில் இருந்த 2 உண்டியல்கள் உடைத்து பணமும் கொள்ளை

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் மேட்டூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். உண்டியல் 18 மாதங்களுக்கு  முன்பு திறக்கப்பட்டது. அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேட்டூர் ஈரோடு முக்கிய சாலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் திருடு போய் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று மேட்டூர் காவல் உள்கோட்டம் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் இரண்டு வீடுகளில் 15 பவுன் தங்க நகை ரொக்கம் ரூ 10,000 திருடப்பட்டது, ஒரு வீட்டில் திருட்டு முயற்சி நடந்தது. 

இந்நிலையில் மேட்டூரில் மாரியம்மன் கோவிலில் உண்டியல் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT