தமிழ்நாடு

கடலில் எல்லை தாண்டி வந்த 6 இலங்கை மீனவர்கள்  சிறைப்பிடிப்பு 

23rd Oct 2020 08:50 AM

ADVERTISEMENT


காரைக்கால் : காரைக்கால் - புதுச்சேரி இடையே கடலில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கடலோரக் காவல் படையினர் சிறைப்பிடித்தனர்.

கடலில் ரோந்துப் பணியில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டிருந்த இந்திய கடலோரக் காவல்படையின் டோர்னியர் ரோந்துக் கப்பல், புதுச்சேரி - காரைக்கால் இடையே கடலில் 75 நாட்டிக்கல் மைல் தூரத்தில் ஒரு மீன்பிடிப் படகு இருப்பதை அறிந்தது. தகவலின்பேரில்  கடலோரக் காவல்படையின் மற்றொரு ரோந்துக் கப்பலான அபீக் அந்த பகுதிக்கு விரைந்துள்ளது. கடலோரக் காவல்படை கப்பலை பார்த்ததும் மீன்பிடிப் படகு அந்த பகுதியிலிருந்து தம்பிக்க முயன்றது.

அந்த படகை கடலோரக் காவல்படை கப்பல் சுற்றிவளைத்தது. அப்போது அந்த படகில் 6 மீனவர்கள் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட படகு என்பதும் தெரியவந்தது.

எல்லை தாண்டி வந்ததாகக்கூறி அந்த மீனவர்கள் காவல்படையின் கப்பலில் ஏற்றிக்கொண்டு, மீன்பிடிப் படகை காரைக்கால் கொண்டுவரப்படுவதாகவும், காரைக்கால் துறைமுகத்தில் படகையும், மீனவர்களையும் நாகப்பட்டினம் மரைன் போலீஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடலோரக் காவல்படை காரைக்கால் மையம் வெள்ளிக்கிழமை தகவல் வெளியிட்டது.

ADVERTISEMENT

Tags : 6 Sri Lankan fishermen 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT