தமிழ்நாடு

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு: அம்பை புதிய நீதிமன்ற வளாகம் முன்பு இருந்த புறக்காவல் நிலைய சாவடி அகற்றம்

DIN

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற வளாகம் முன்பு இருந்த புறக்காவல் நிலைய சாவடியை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரீஸ்வர் பிரதாப் ஷாகி உத்தரவிட்டதையடுத்து சாவடியை இரவோடிரவாக காவல் துறையினர் அகற்றினர். 

அம்பாசமுத்திரத்தில் 100 ஆண்டுகள் பழைமையான கட்டடத்தில் நீதிமன்றங்கள் செயல்பட்டுவந்தன. இவற்றை அகற்றி புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து 2017ஆம் ஆண்டு ஜூலையில் ரூ. 7.23 கோடி மதிப்பில் பழைய கட்டடத்தை இடித்து புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும் பணி தொடங்கியது.

கட்டடப் பணிகள் முழுமையடைந்த நிலையில் வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரீஸ்வர் பிரதாப் ஷாகி புதிய நீதிமன்ற வளாகத்தைப் பார்வையிட்டார். அப்போது நீதிமன்ற கட்டடப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பத்து நாட்களில் நீதிமன்றம் இந்தக் கட்டடத்தில் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். 

புதிய நீதிமன்ற வளாகத்தில் வெளியேறும் வாசல் முன்பு அமைக்கப்பட்டிருந்த புறக்காவல் நிலைய சாவடியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரான்சிஸிடம் உத்தரவிட்டார். இது குறித்து உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த நிலையில் வியாழக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரம் கொண்டு புறக்காவல் நிலைய சாவடி அகற்றப்பட்டது.

மேலும் 10 நாள்களில் புதிய கட்டடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் இயங்கும் என்று உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவித்துள்ள நிலையில் நீதிமன்ற வளாகம் முன்பு அமைந்துள்ள பயணிகள் நிழற்குடையையும் அகற்ற உத்தரவிட்டுள்ளதையடுத்து விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அம்பாசம்குத்திரம் புதிய நீதிமன்ற வளாகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த புறக்காவல் நிலைய சாவடி அகற்றப்பட்டது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT