தமிழ்நாடு

சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் 1000-க்குள் குறைந்த கரோனா

DIN


சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அனைத்து மண்டலங்களிலும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்குள் குறைந்துள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,93,299 ஆக உள்ளது. இவர்களில் 1,78,623 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சென்னையில் ஒட்டுமொத்தமாக 11,107 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கரோனா பாதித்தவர்களில் இதுவரை 3,569 பேர் பலியாகியுள்ளனர். கரோனா பாதித்த நோயாளிகளில் 62 சதவீதம் பேர் ஆண்கள், சுமார் 37 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

கரோனா பாதித்த நோயாளிகளில் 50 - 59 வயதுக்குட்பட்டவர்களே அதிகம். இந்த வயதுடைய 18.54 சதவீதம் பேருக்கு கரோனா பாதித்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் 30 - 39 வயது மற்றும் 40 - 49 வயதுடையவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கத்தில் மட்டும் 900 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்ஸ்வெல்லின் முடிவு சரியானது: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ!

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

SCROLL FOR NEXT