தமிழ்நாடு

அக்.28-ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய இயக்குனர்

DIN


வடகிழக்கு பருவமழை அக்.28-ல் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். 

அக்டோபர் 26, 27 தேதிகளில் காற்றின் திசை மாறக்கூடும். எனவே அக்டோபர் 28-ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளது.

தற்போது வளிமண்டலத்தில் ஏற்படும் மேலடுக்குகளால் மழை பெய்து வருகின்றது. அடுத்த இரண்டு நாள்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நேற்று மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இன்னும் சில மணி நேரங்களில் சாகர் தீவு மற்றும் சுந்தர்பன் காடுகளுக்கு இடையே கரையைக் கடக்கும். 

வட தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம், கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்

பள்ளிப்பட்டு 17 செ.மீ மழையும், ராம கிருஷ்ண ராஜு பேட்டை 13 செ.மீ மழையும், தாமரைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் தலா 11 செ.மீ மழையும், திருத்தணி, திருத்தணி பி.டி.ஓ தலா 9 செ.மீ மழையும், மதுராந்தகம், திருவள்ளூர், சென்னை, நுங்கம்பாக்கம், உத்திரமேரூர், கும்மிடிப்பூண்டி, வேம்பாக்கம், புதுச்சேரி தலா 7 செ.மீ மழையும், திருவாலங்காடு, செய்யூர், அரக்கோணம், ரெட்ஹில்ஸ் தலா 6 செ.மீ மழையும், கொரட்டூர், ஆலந்தூர், சென்னை விமான நிலையம், காஞ்சிபுரம், கேளம்பாக்கம், காவேரிப்பாக்கம், பெரம்பூர் தலா 5 செ.மீ மழையும் பெய்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT