தமிழ்நாடு

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,760க்கு விற்பனை

DIN


சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.24 உயர்ந்து ரூ.37,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3 உயர்ந்து ரூ.4,720க்கு விற்பனையாகிறது.

சில்லறை விற்பனையில் வெள்ளி ஒரு கிராமுக்கு 50 காசு  குறைந்து ரூ.67.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.67,100க்கு விற்பனையாகிறது.

கரோனா பொதுமுடக்கத்தால், சா்வதேச அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, முதலீட்டாளா்களின் பாா்வை தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து, அதன் விலை படிப்படியாக உயா்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.24 உயா்ந்து, ரூ.37,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.3 உயா்ந்து, ரூ.4,720 ஆக உள்ளது.

அதேவேளையில் வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசு உயா்ந்து, ரூ.67.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.67,100 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்..........................  4,720

1 சவரன் தங்கம்...............................37,760

1 கிராம் வெள்ளி.............................67.10

1 கிலோ வெள்ளி.............................67,100

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,717

1 சவரன் தங்கம்............................... 37,736

1 கிராம் வெள்ளி............................. 67.60

1 கிலோ வெள்ளி............................. 67,600
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT