தமிழ்நாடு

திருச்செங்கோடு அருகே சாலை விபத்து: தேமுதிக பிரமுகர் உள்பட இருவர் பலி

DIN

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த தோக்கவாடி அருகே கருமகவுண்டம் பாளையம் பகுதியில் நள்ளிரவில் கார் புளியமரத்தில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

திருச்செங்கோடு தேமுதிக கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாவட்ட துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவரும், 2016 சட்டமன்ற தேர்தல் மக்கள் நலக் கூட்டணி சார்பாக திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டவரும், தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியருமான விஜய் கமல்(42) அவரது மாமனார் ஈரோட்டை சேர்ந்த ரங்கநாதன்(60)விஜய் கமல் மனைவி திவ்யா (33)மாமியார் மாதேஸ்வரி (55), மனைவியின் சகோதரி அகல்யா (30) ஆகியோருடன் பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டு  சிகிச்சைக்குப் பிறகு ரங்கநாதனை விஜயகுமார் தனது காரில்  ஈரோட்டில் கொண்டு சென்று விடுவதற்காக மேற்கண்ட நபர்களுடன்  காரில் புறப்பட்டார். 

காரினை விஜய் கமல் ஓட்டிச்சென்றார். நள்ளிரவு சுமார் 2 மணியளவில் திருச்செங்கோடு  அடுத்த தோக்கவாடி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறிய கார்  கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சாலையோரம் உள்ள புளியமரத்தில் கார் வேகமாக மோதியது. கார் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த விஜய் கமல் அவரது மாமனார் ரங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திவ்யா மாதேஸ்வரி, அகல்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கு திருச்செங்கோடு ஊரக காவல் துறையினர் விரைந்து சென்றனர். முன்பக்கம் முழுவதும் மரத்தில் மோதி நெருங்கியிருந்த காருக்குள் இறந்து கிடந்த விஜயகமல், ரங்கநாதன் ஆகியோர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்தில் இறந்த விஜய் கமலுக்கு சஞ்சீவ், ஹரீஸ் ஆதவ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். விபத்து குறித்து ஊரக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT