தமிழ்நாடு

அவிநாசி அருகே நூற்பாலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம்

DIN

அவிநாசி: அவிநாசி அருகே பெரியநாதம்பாளையத்தில் நூற்பாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின.

அவிநாசி அருகே பெரியநாதம்பாளையம் பகுதியில் வேஸ்ட் பனியன் துணிகளை பஞ்சாக மாற்றும் நூற்பாலை வைத்து நடத்தி வருபவர் கோபி எலத்தூர் பகுதியைச் சேர்ந்த மசிரியப்பன் மகன் மயில்சாமி(39). இந்நிலையில் இந்த நூற்பாலையில் வியாழக்கிழமை 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுடன் பணி நடைபெற்று வந்துள்ளது. 
அப்போது திடீரென இயந்திரத்தில் எதிர்பாராக விதமாக ஏற்பட்ட  மின்கசிவு காரணமாக குடோனில் அடக்கி வைத்திருந்த பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் உள்ளிட்டவை தீப்பிடித்து எரியத் தொடங்கின. 

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி, திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் ஹலோ பிளாக்குடன் சிமெண்ட் சீட் பொருத்தப்பட்டிருந்ததால், கட்டடங்கள் கீழே விழுந்து விடாமல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் நூற்பாலையில் இருந்த இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள் என பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. 

இதில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினர். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT