தமிழ்நாடு

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

DIN


கமுதி: முத்துராமலிங்கத்தேவர் ஜயந்திவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் கொ.வீரராகவராவ் புதன்கிழமை ஆய்வு செய்தார். 
கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் ஜயந்திவிழா மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், கட்சி பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
இதனால் விழா ஏற்பாடுகள், அத்தியாவசியப் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ஆகியோர் புதன்கிழமை ஆய்வு நடத்தினர். அப்போது, வருவாய்த்துறை,  ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, மின் வாரிய அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
முன்னதாக, நினைவாலய பொறுப்பாளர்கள் காந்தி மீனாளம்மாள், தங்கவேலு, பழனி ஆகியோர் வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT