தமிழ்நாடு

கரோனா: நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 88.81% உயர்வு  

21st Oct 2020 10:47 AM

ADVERTISEMENT


கரோனா நோய்த்தொற்று பாதிக்கு குணமடைந்து வருவோரின் விகிதம் 88.81 சதவீகிதமாக உயர்ந்துள்ளது. புதன்கிழை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 61,775 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 717 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 1,15,914 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தோா் சதவீதம் 1.51 ஆக உள்ளது.

கரோனாவால் மேலும் 54,044 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மொத்த கரோனா பாதிப்பு 76,51,108 ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

இப்போதைய நிலையில் 7,40,090 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 9.67 சதவீதமாகும். இதுவரை 67,95,103 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 88.81 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி இதுவரை 9,72,00,379 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் செவ்வாய்கிழமை மட்டும் 10,83,608 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. 

Tags : coronavirus India
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT