தமிழ்நாடு

செங்கல்பட்டில் காவலர் வீரவணக்க நாள்

21st Oct 2020 03:10 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், வேம்பாக்கம் ஐடிஐ வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வீரவணக்க நாளையொட்டி, பல்வேறு சூழ்நிலைகளில் காவல்துறையில் பணியாற்றி தன் இன்னுயிரைத் தியாகம் செய்த காவலர்களுக்காக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 

ஐடிஐ மைதானத்தில் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெ.கண்ணன் கலந்துகொண்டு உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

இந்நிகழ்வில் ஏடிஎஸ்பி வி.பொன்ராஜ் ஏஎஸ்பி-க்கள் சுந்தரவதனம் ஆதார்ஷ்பசேரா, டிஎஸ்பி-க்கள் ரவிச்சந்திரன், கவினா, இன்ஸ்பெக்டர் விநாயகம் எஸ்.ஐ.கள் மணிகண்டன், கோகுல், தேவானை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் கூறுகையில், காவல்துறையில் பணியாற்றிய காவலர்கள், அதிகாரிகள் என பல்வேறு சூழல்களில் தன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். அவர்களை நினைவு கூறும் விதமாக அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதையுடன் வீரவணக்கம் செலுத்தி உள்ளோம்.

ADVERTISEMENT

மேலும், தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் மக்கள் சேவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பல காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் கூட உயிரிழந்துள்ளனர். அவர்களின் தன்னலமற்ற சேவைக்காகவும் இந்த வீர வணக்கம் நிகழ்வு நடைபெற்றது என தெரிவித்தார்.

Tags : செங்கல்பட்டு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT