தமிழ்நாடு

ரூ.45-க்கு வெங்காயம்: அமைச்சர் செல்லூர் ராஜு தொடக்கி வைத்தார்

DIN

பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 45-க்கு விற்பனை செய்யும் திட்டத்தை சென்னையில் அமைச்சர் செல்லூர் ராஜு தொடக்கி வைத்தார். 

வெங்காயம் விளைச்சல் அதிகமுள்ள பகுதிகளான மகாராஷ்டிரம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக தமிழகத்திற்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்து, நேற்று ஒரு கிலோ வெங்காயம் ரூ. 110-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதையடுத்து, வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தி நுகா்வோருக்கு குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய, சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் பண்ணை பசுமை நுகா்வோர் கடைகள் மற்றும் நகரும் கடைகள் மூலமாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த திட்டத்தை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடக்கி வைத்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமைக் கடையில் நுகர்வோருக்கு ரூ. 45-க்கு வெங்காயம் வழங்கி விற்பனையைத் தொடக்கி வைத்தார்.

சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் இன்று(புதன்கிழமை) முதலும், இதர பகுதிகளில் வியாழக்கிழமை முதலும் ரூ. 45-க்கு வெங்காயம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT