தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு கரோனா; மேலும் 50 பேர் பலி

20th Oct 2020 06:22 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (அக். 20, செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் குறித்த தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாநிலத்தில் புதிதாக 3,094 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 6,94,030 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் புதிதாக 857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய அறிவிப்பில் மேலும் 50 பேர்(அரசு மருத்துவமனை -31; தனியார் மருத்துவமனை - 19) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,741 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் மேலும் 4,403 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,46,555 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 36,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று 80,371 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 91,12,067 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு பரிசோதனை ஆய்வகங்கள் 66, தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் 128 என மொத்தம் 194 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தொடர்ந்து 3 ஆவது நாளாக இன்று கரோனா ஒருநாள் பாதிப்பு 4,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT