தமிழ்நாடு

தொழில்முனைவோர் 'நீட்ஸ்' திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (நீட்ஸ்) கீழ் கடனுதவிப் பெறத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர். சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம், ஆண்/பெண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகளை, “தொழில் முனைவோர்களாக்க”, “ புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்” என்ற கடனுதவித் திட்டமானது தமிழக அரசால் 2012-13 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழில் நுட்பப்பயிற்சி (ஐடிஐ) இவைகளில் ஏதேனுமொன்றில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். 

விண்ணப்பிக்கும் நாளில் பெண்கள் / பட்டியல் இனத்தவர் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகிய சிறப்புப் பிரிவினர் 45 வயதுக்குட்பட்டவராகவும், பொதுப் பிரிவினர் 35 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறையதது கடயத மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். முதல் தலைமுறை தொழில் முனைவோராயிருப்பது அவசியம்.

பத்து லட்ச ரூபாய்க்கு குறையாமலும், ஐந்து கோடி ரூபாய்க்கு மிகாமலும் திட்ட மதிப்பீடு கொண்ட உற்பத்தி / சேவை நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம். திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ.30 இலட்சத்தை உள்ளடக்கிய 25% மானியமும், வங்கியினரிடமிருந்து பெற்ற கடனுக்கென செலுத்தப்படும் வட்டித்தொகையில் 3%பின்முனை வட்டி மானியமும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. சேவைத் தொழில்களான உடற்பயிற்சிக் கூடம், அழகு நிலையம், மருத்துவமனைகள், ஜெராக்ஸ் னு.கூ.ஞ. உணவகங்கள், பல் சிகிச்சையகங்கள், கட்டட கட்டுமான இயந்திரங்கள், ஜேசிபி இயந்திரங்கள் ஆகிய தொழில்களை இத்திட்டத்தின் மூலம் தொடங்கலாம். 

மேலும் இயந்திரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யும் உற்பத்தி நிறுவனங்களையும் தொடங்கலாம். நடப்பு நிதியாண்டு 2020-21ல் 48 நபர்களுக் ரூ. 472 இலட்சம் மானியம் வழங்க சென்னை மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே தொழில் முனைய ஆர்வமுடைய, மேற்குறிப்பிட்ட தகுதிகளையுடைய முதல் தலைமுறை இருபால் தொழில் முனைவோர்களும்  www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பத்தினை பதியுமாறும், மேற்கண்ட இணையதளத்தில் பதியப்பட்ட விண்ணப்பத்தின் இரு நகல்களை உரிய அனைத்து இணைப்புகளோடும் சென்னை மாவட்டம் கிண்டி தொழிற் பேட்டையில் அமைந்துள்ள மண்டல இணை இயக்குநர் (தொழில் மற்றும் வணிகத்துறை) அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இத்திட்டம் தொடர்பான விவரங்கள் பெற மண்டல இணை இயக்குநர் (தொழில் மற்றும் வணிகத்துறை) அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044-22501621/22, 9597373548 என்ற தொலைபேசிமூலமாகவோ தொடர்புகொண்டு விவரங்கள் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT