தமிழ்நாடு

மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

DIN

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரியில் செவ்வாய்க்கிழமை தொலைத்தொடர்பு நிலைய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து தலைமை வகித்துப் பேசினார். மாவட்டச் செயலர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, இரா.சிசுபாலன், மாதர் சங்க மாவட்டச் செயலர் கிரைஸாமேரி ஆகியோர் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் அனுமதி வழங்க வேண்டும். விதிகளை மீறிச் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT