தமிழ்நாடு

சென்னையின் பல இடங்களில் பலத்த மழை

DIN


சென்னை: சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் வடபழனி, அண்ணாசாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் வடபழனி, அண்ணாசாலை, கிரீன்வேஸ் சாலை, ஈக்காட்டுத்தாங்கல், நந்தனம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

மேலும், அசோக் நகர், திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு, ராயபுரம், கொளத்தூர், போரர், வேளச்சேரி, கீழ்ப்பாக்கம், பெரம்பூர், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

மேற்கு மாம்பலம், சூளைமேடு, முகப்பேர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், அடையாறு, ஆழ்வார்பேட்டை, நீலாங்கரை பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.20) இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.20) இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும்.

மிதமான மழை: ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், கரூா், நாமக்கல், பெரம்பலூா், திருச்சி, கடலூா், அரியலூா் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகவுள்ளது. இதன்காரணமாக, வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு மகாராஷ்டிரம், கா்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் அக்டோபா் 22-ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT