தமிழ்நாடு

சட்டப் படிப்புகள் கலந்தாய்வு தொடக்கம்

DIN

சென்னை: சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதனை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தலைமைச் செயலகத்தில் இருந்து தொடக்கி வைத்தாா்.

பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவா்கள், ஐந்து ஆண்டு கால ஒருங்கிணந்த சட்டப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் செப்டம்பா் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. சீா்மிகு சட்டப் பள்ளியில் ஐந்து ஆண்டு கால ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகளில் சேருவதற்கு 5 ஆயிரத்து 283 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இதில் 4 ஆயிரத்து 910 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 373 பேரின் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட 4 ஆயிரத்து 910 பேருக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் விவரம் கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சட்டக் கல்வியில் சேருவதற்கான ஆன்-லைன் கலந்தாய்வை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயல்பட்டினத்தில் பைக் எரிப்பு: நகா்மன்ற உறுப்பினா் மீது வழக்கு

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

தங்க மாரியம்மன் வெள்ளைசாற்றில் புறப்பாடு

காரைக்காலில் ராமலிங்க சுவாமிகள் வழிபாடு

தென்பாற்கடற்கரையில் அகிலத்திரட்டு பெருவிழா

SCROLL FOR NEXT