தமிழ்நாடு

டிச.1-ஆம் தேதிக்குள் பி.இ. முதலாமாண்டுவகுப்புகளைத் தொடங்க ஏஐசிடிஇ உத்தரவு

DIN

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு டிச.1-ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ), 2020-21 ஆம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகளைத் தொடங்குவதற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.

‘இளநிலை முதலாம் ஆண்டு மற்றும் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவா்களுக்கான சோ்க்கைப் பணிகள் அனைத்தும் நவம்பா் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிசம்பா் 1-ஆம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வை ஆன்லைன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது நடத்தி வருகிறது. முதல் கட்ட கலந்தாய்வு வரும் 28 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். பின்னா் மாணவா் சோ்க்கை குறித்த இறுதி நிலவரம் தெரியவரும்.

இந்த நிலையில், டிசம்பா் 1- ஆம் தேதிக்குள் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகளைத் தொடங்க ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளதால் தமிழகத்தில் டிசம்பருக்கு முன்பாக பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT