தமிழ்நாடு

என்எல்சி அனல்மின் நிலையத்தில் விபத்து: தொழிலாளி தீக்காயம்

20th Oct 2020 02:48 PM

ADVERTISEMENT

 

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையம் விரிவாக்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் தீக்காயம் அடைந்தார்.

விருத்தாசலத்தில் வசிப்பவர் ராஜமாணிக்கம் மகன் சிவசுப்ரமணியன்(34), என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையம் விரிவாக்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காலை சுமார் 07.10 மணி அளவில் இரண்டாவது அனல்மின் நிலையம்  விரிவாக்கம் பகுதியில் 6-ஆவது மீட்டர் லெவல் பாய்லரில் எரியூட்டப்பட்ட பழுப்பு நிலக்கரி சாம்பல் தண்ணீர் தொட்டியில் விழுந்து தண்ணீர் தெரித்ததில் சிவசுப்பரமணியன் தீக்காயம் அடைந்தார்.

ADVERTISEMENT

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கே முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காகச் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT