தமிழ்நாடு

6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.20) இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.20) இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும்.

மிதமான மழை: ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், கரூா், நாமக்கல், பெரம்பலூா், திருச்சி, கடலூா், அரியலூா் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் 70 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் மலையூரில் 60 மி.மீ., திருமயத்தில் 50 மி.மீ., குடுமியான்மலை, திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் தலா 40 மி.மீ., திருச்சி மாவட்டம் துறையூா், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகவுள்ளது. இதன்காரணமாக, வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு மகாராஷ்டிரம், கா்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் அக்டோபா் 22-ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

SCROLL FOR NEXT